​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல்..!

Published : May 05, 2022 1:48 PM

அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல்..!

May 05, 2022 1:48 PM

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை முதலமைச்சர் நியமிப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்ட மசோதவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் அறிமுகம் செய்தார்.

குஜராத், தெலுங்கானா, கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் துணை வேந்தரை அரசின் இசைவுடன் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகச் சட்டத்திலும் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்று சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.