பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நூல் விலையில் மாற்றம் ஏற்படுவதால், துணிகளுக்கு நிரந்தரமான விலை நிர்ணயிக்க முடியாத சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், இதனால் நாள் ஒன்றிற்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் எனவும், தொடர்ந்து 15 நாட்களுக்கு புதிய நூல் வாங்கப் போவதில்லை எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.