ஷாங்காயில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி!
Published : May 05, 2022 1:27 PM
ஷாங்காயில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி!
May 05, 2022 1:27 PM
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப்பொருட்கள் தரமற்று இருந்ததால் அதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சீனாவில் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 261 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.