கல்வியில் காவிமயமாக்கல் இல்லை என்றும், அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முதன்மை அளிக்கப்படுவதாகவும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கை பற்றிய வினாவுக்குப் பதிலளித்த அவர், கல்வியைக் காவிமயமாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை ஊக்குவிப்பதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் அரசு சமமாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டார்.