​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எடுக்கப்பட்ட நிலைப்பாடே தற்போதும் நீடிப்பு - அமைச்சர் எ.வ.வேலு

Published : Apr 12, 2022 3:38 PM

8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எடுக்கப்பட்ட நிலைப்பாடே தற்போதும் நீடிப்பு - அமைச்சர் எ.வ.வேலு

Apr 12, 2022 3:38 PM

சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எடுக்கப்பட்ட நிலைப்பாடே தற்போதும் நீடிப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய மயிலம் தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார், சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, 8 வழிச்சாலை திட்டமானது 6 வழிச்சாலையாக ஏற்கனவே மாற்றப்பட்டதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்டு, அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.