​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிஎன்பிஎஸ்சி அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கப்படும்.. சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published : Apr 12, 2022 3:25 PM

டிஎன்பிஎஸ்சி அடிப்படை கட்டமைப்பு சீரமைக்கப்படும்.. சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Apr 12, 2022 3:25 PM

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறினார்.

இந்த பணி இடங்களை நிரப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.