​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்க இருப்பதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பு

Published : Apr 11, 2022 7:03 PM

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்க இருப்பதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பு

Apr 11, 2022 7:03 PM

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவும் வகையில், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்க இருப்பதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதையொட்டி, C-130 ஹெர்குலஸ் விமானத்தில் ராணுவ உபகரணங்களுடன், 58 வீரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட இருப்பதாக நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பீனி ஹெனேர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவத்திற்கு உதவும் வகையிலும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் அந்நாட்டிற்கு உதவும் நோக்கிலும் கூடுதலாக 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.