​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியில் இருந்து திடீர் புகை... பேட்டரியை லாவகமாக கழற்றி வெளியே எடுத்த உரிமையாளர்

Published : Apr 11, 2022 5:59 PM



மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியில் இருந்து திடீர் புகை... பேட்டரியை லாவகமாக கழற்றி வெளியே எடுத்த உரிமையாளர்

Apr 11, 2022 5:59 PM

திருப்பூரில் பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரின் பேட்டரியில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், அதனை வாகன உரிமையாளர் வாகனத்தில் இருந்து லாவகமாக வெளியே எடுத்தார்.

திருப்பூர் புஷ்பா திரையரங்கு பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒக்கினாவா மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி பொருத்தப்பட்ட பகுதியில் இருந்து புகை வெளியானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேட்டரியை அந்த வண்டியின் உரிமையாளர் வெளியே எடுத்து வைத்தார்.

பேட்டரி புகை குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், அதன் மீது நீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.