​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரும்பான்மை பெறாததால் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாம் கட்டத் தேர்தல்

Published : Apr 11, 2022 5:28 PM

பெரும்பான்மை பெறாததால் பிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாம் கட்டத் தேர்தல்

Apr 11, 2022 5:28 PM

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாத நிலையில் முதலிரு இடங்கள் பெற்ற இம்மானுவேல் மேக்ரான், மரின் லீ பென் ஆகியோரில் ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்க இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 24ஆம் நாள் நடைபெற உள்ளது.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்றுப் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் எந்த வேட்பாளரும் 51 விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை. இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 27 புள்ளி 6 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரின் லீ பென் 23 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். பிரான்ஸ் தேர்தல் விதிமுறைப்படி எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால் முதலிரு இடங்களைப் பிடித்தோர் இடையே இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும்.