​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கேவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

Published : Apr 11, 2022 4:43 PM

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கேவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை

Apr 11, 2022 4:43 PM

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கு தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு மற்றும் அசோசியேட் பிரஸ் இடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் தற்போது அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

இதற்காக, அவருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அவர் ஆஜரானார். சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் அமலாக்கத் துறையினர் வாக்குமூலம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.