​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமநவமி விழாவின்போது நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான்

Published : Apr 11, 2022 4:31 PM

ராமநவமி விழாவின்போது நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான்

Apr 11, 2022 4:31 PM

மத்தியபிரதேச மாநிலத்தில் ராமநவமி விழாவின்போது நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கார்கோன் நகரில் நேற்று நடைபெற்ற ராமநவமி விழாவின்போது நிகழ்ந்த கலவரத்தில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. வீடுகளும் சூறையாடப்பட்டன. எஸ்பி மற்றும் 6 போலீசாரும் காயமடைந்ததை தொடர்ந்து, கார்கோன் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கலவரம் தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கலவரத்தில் தொடர்புடையவர்களை சிறைக்கு அனுப்புவதோடு சொத்துகளை சூறையாடிய அவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.