​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி - ஏ.ஆர். ரகுமான்

Published : Apr 11, 2022 7:04 AM



தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி - ஏ.ஆர். ரகுமான்

Apr 11, 2022 7:04 AM

தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய ஏ.ஆர். ரகுமான், தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியா தான். இதில் வட இந்தியா தென்னிந்தியா என்று இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.ஆர். ரகுமான், தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி என்று குறிப்பிட்டார்.