​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுகிறார் ஷெபாஸ் ஷெரீப்.!

Published : Apr 11, 2022 6:46 AM

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்று தேர்வு செய்யப்படுகிறார் ஷெபாஸ் ஷெரீப்.!

Apr 11, 2022 6:46 AM

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப் இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பிலாவல் பூட்டோ புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்காக பாகிஸ்தானின் தேசிய நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூட்டப்பட்டுள்ளது.

இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் புதிய பிரதமர் இன்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ வெளியுறவு அமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார். ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராகத் தேர்வு செய்தால் அதிகளவில் ராஜினாமா செய்யப்போவதாக இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.