​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோத்தபய அரசின் திறமையின்மையால் பொருளாதார நெருக்கடி - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

Published : Apr 10, 2022 6:30 PM

கோத்தபய அரசின் திறமையின்மையால் பொருளாதார நெருக்கடி - முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

Apr 10, 2022 6:30 PM

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு, ஆளும் கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பேட்டியளித்த அவர், இரண்டு ஆண்டுகளாகப் பொருளாதாரச் சிக்கல்களை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால், பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு தான் ஆட்சியை விட்டுச்சென்றபோது பட்ஜெட்டில் உபரித்தொகை வைத்திருந்ததை நினைவுகூர்ந்தார்.

வளங்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில் பன்னாட்டுப் பண நிதியத்தில் கடன்பெற அரசு தீர்மானித்துள்ளதாகவும், முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

எரிபொருளுக்காக இந்தியா வழங்கியுள்ள கடனுதவி மே இரண்டாம் வாரத்தில் தீர்ந்துவிடும் என்றும் அதன்பிறகு நிலைமை மேலும் சிக்கலாகும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கு நிதியுதவி மட்டுமல்லாமல் பெருமளவில் பொருளுதவியும் செய்துள்ள இந்தியாவுக்கு ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்தார்.