​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நேட்டோ அமைப்பில் இணையும் மேலும் இரு ஐரோப்பிய நாடுகள்?

Published : Apr 10, 2022 2:56 PM

நேட்டோ அமைப்பில் இணையும் மேலும் இரு ஐரோப்பிய நாடுகள்?

Apr 10, 2022 2:56 PM

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் விரைவில் இணைய உள்ளதாக நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேட்டோ அமைப்பை வலுவடையச் செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது எடுத்த ராணுவ நடவடிக்கையின் காரணமாக, அவர் நினைத்ததற்கு மாறாக நேட்டோ அமைப்பு வலுவடைந்துள்ளதாக நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 30 நாடுகளை கொண்ட நேட்டோ அமைப்பில் தற்போது பின்லாந்து மற்றும் ஸ்வீடன் சேர்வதன் மூலம், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள ராணுவ நடவடிக்கையின் விளைவாகவே நேட்டோ அமைப்பில் சேர்வது குறித்து பரிசீலனை செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பின்லாந்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.