​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Published : Apr 10, 2022 2:08 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Apr 10, 2022 2:08 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது .

ஏப்ரல் 12, 13, 14 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.