பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரான் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டி.. பிரான்சிலும் அதன் ஆட்சிப்பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு
Published : Apr 10, 2022 1:50 PM
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மேக்ரான் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டி.. பிரான்சிலும் அதன் ஆட்சிப்பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு
Apr 10, 2022 1:50 PM
பிரெஞ்சு அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் இருந்தாலும், அவரையடுத்த நிலையில் லீ பென்னும் நெருக்கமாக உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும், உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெறாவிட்டால், முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களிடையே ஏப்ரல் 24அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
சிலவாரங்களுக்கு முன் கருத்துக் கணிப்பில் மேக்ரான் எளிதில் வெற்றிபெறுவார் எனக் கூறப்பட்டது.
அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பில் மரின் லீ பென்னும் மேக்ரானுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார் எனத் தெரியவந்துள்ளதால், அவர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.