இம்ரான் கான் மீதுள்ள பற்றுதலால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற மறுத்த முன்னாள் சபாநாயகர் ஆசாத் கெய்சர், நீதிமன்ற அவதிப்புத் தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்த ஆசாத் கெய்சர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதுடன் அவையை விட்டு வெளியேறினார்.
சபாநாயகர் கட்சி சார்பற்றுச் செயல்பட வேண்டும் என்கிற நிலையில், இம்ரான் கானுடன் 30 ஆண்டுகளாகக் கெய்சர் கொண்டிருந்த நட்பால் அவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த மறுத்துவிட்டுப் பதவி விலகினார்.
இந்த விசுவாசம் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்கான சட்ட நடவடிக்கைக்கும், தண்டனைக்கும் அவரை உள்ளாக்கும் எனக் கூறப்படுகிறது.