உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கீவ் நகரின் மையப்பகுதியில் மக்களை சந்தித்து உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும்! தைரியம் என்றால் இப்படித்தான் இருக்கும்! மக்களுக்கும், நாடுகளுக்கும் இடையிலான உண்மையான நட்புறவு என்றால் இப்படித்தான் இருக்கும்! என குறிப்பிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.