​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

Published : Apr 10, 2022 10:51 AM

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு.. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

Apr 10, 2022 10:51 AM

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இரு கட்டங்களாக நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தற்போதைய அதிபர்  இமானுவேல் மேக்ரான் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேராளாவில் வசிக்கும் சுமார் 4 ஆயிரத்து 564 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், காரைக்காலில் உள்ள அலியான்ஸ் பிரெஞ்சில் உள்ள வாக்குச்சாவடியிலும் இந்த மக்கள் வாக்களிக்க பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், பிரெஞ்சு குடிமக்கள் தங்களது குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.