​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போட்ட ஐ.பி.எல்..! விரட்டி விரட்டி வெளுத்துவிடுராய்ங்க..!

Published : Apr 10, 2022 10:38 AM



சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போட்ட ஐ.பி.எல்..! விரட்டி விரட்டி வெளுத்துவிடுராய்ங்க..!

Apr 10, 2022 10:38 AM

நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும், தாங்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்

முன்பொரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போட சொன்னத தப்பா புரிஞ்சி கிட்டாங்க போல, 2022 ஐ.பி.எல்-லில் 4 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜெயிக்க விடாமல் விரட்டி விரட்டி அடித்து வருகின்றன எதிர் அணிகள்..!

கடந்த காலங்களில் பெரிய விசில் போடச்சொன்ன டோனியும் இந்த முறை ஜொலிக்க முடியவில்லை, 'கேப்டன் பொறுப்போடு சேர்த்து தனது ஆட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டார் போல' என்று எதிர் அணியின் ரசிகர்கள் கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சி.எஸ்.கே.

வழக்கமாக 8 அணிகள் மோதிய ஐ.பி.எல்லில் இந்த முறை, புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் பல வெற்றிகளுடன் சாம்பியனாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் முன்னேற ஒரு வெற்றிக்கே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை வழக்கமாகக் கொண்ட நெட்டிசன்களோ, தங்களது வித்தியாசமான மீம்ஸ்-களால் சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை அடித்துத் துவைத்து காயப்போட்டுக் கொண்டிருப்பதால் அதன் ரசிகர்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் நடந்த போட்டிகளில் எல்லாம் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இல்லாமலே ஐ.பி.எல்லை நடத்தி இருக்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.

அதற்காக இந்த இரு அணிகளுக்கும் வாய்ப்பில்லை என்று கருதி விட முடியாது என்று கூறும் கிரிக்கெட் விமர்சகர்கள், 14 போட்டிகள் கொண்ட தகுதிச் சுற்றில் இரு அணிகளும் 4-ல் தான் தோல்வி அடைந்திருக்கின்றனர், அடுத்தடுத்து வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் எளிதாக பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தன்னம்பிக்கையுடன் திறம்பட விளையாடி இழந்த புகழை சி.எஸ்.கே மீட்குமா ? அல்லது விசிலுக்கு பதிலாக வேறு ஏதாவது சத்தம் ஒலிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்..!