​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விண்வெளி குறித்த பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தனியார் குழு

Published : Apr 10, 2022 10:14 AM

விண்வெளி குறித்த பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தனியார் குழு

Apr 10, 2022 10:14 AM

விண்வெளி குறித்த முதல் வணிக ரீதியிலான ஆராய்ச்சியை மேற்கொண்ட தனியார் குழு 21 மணி நேர பயணத்திற்கு பின் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.

அக்சியம், ஸ்பேஸ் எக்ஸ், நாசா ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைந்து விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியிலான 4 வீரர்கள் கொண்ட குழுவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியது.

புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சென்ற வீரர்கள் 21 மணி நேர பயணத்திற்கு பின் விண்வெளி மையத்தை அடைந்தனர்.

புதிதாக வந்த வீரர்களுக்கு ஏற்கனவே அங்கிருக்கும் வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளில் நால்வர் குழு ஈடுபடுகிறது.