தூத்துக்குடி அருகே ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரது வாட்ஸ்ஆப்-ற்கு வந்த லிங்க் மூலம் போலியான முதலீடு நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து 24 ஆயிரம் ரூபாய் வரை பணம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
தனது பணம் திரும்பி வராததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து சைபர் குற்றபிரிவு போலீசார் விசாராணை மேற்கொண்டதில், கேராளாவைச் சேர்ந்த முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரும் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், தூத்துக்குடியில் 12 பேரிடமிருந்து சுமார் 37 லட்சம் ரூபாயும், 10 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.