இந்தியா ரஷ்யா இடையே ரூபாய் -ரூபிள் முறை வர்த்தகத்திற்கான எந்த ஒரு ஏற்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து முதலீட்டாளர்களுடனும் ஆலோசித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர், ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளில் ரூபிளுக்கான திட்டம் ஏதுமில்லை என்று கூறினார்.
உக்ரைன் போர் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் கடுமையாக பாதித்துள்ளதால் எந்த ஒரு செயல்பாடும் உடனடியாக அமல்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக முதலீட்டாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ரபி சங்கர் கூறியுள்ளார்.