இலங்கையை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்க 6 மாதங்களில் 3 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என அந்நாட்டு நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் நிதி திரட்டுவது கடினமான பணி என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஒரு பில்லியன் டாலர் தொகைக்கு மேல் உள்ள பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசை எதிர்க்கும் மக்களின் உரிமையை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.