​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா தடுப்பூசிகளின் விலை குறைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு

Published : Apr 09, 2022 3:58 PM



கொரோனா தடுப்பூசிகளின் விலை குறைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு

Apr 09, 2022 3:58 PM

சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் தடுப்பு மருந்து விலையை ஒரு டோஸ் 225 ரூபாயாகக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.

சீரம் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவாலா டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து விலையை 600 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததை அவர் வரவேற்றுள்ளார்.

இதேபோல பாரத் பயோடெக் நிறுவனமும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலையை 1200 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களின் கூட்டத்தை மத்திய நலவாழ்வுத் துறைச் செயலாளர் நடத்தினார்.

அதில் தனியார் தடுப்பூசி மையங்களில் மருந்தின் விலைக்கு மேல் சேவைக் கட்டணமாக அதிகப்பட்சமாக 150 ரூபாய் வரை மட்டுமே பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.