​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்

Published : Apr 09, 2022 2:40 PM

கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்

Apr 09, 2022 2:40 PM

இலங்கை அரசுக்கு எதிராக தலைநகர் கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் உள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சவின் சொத்துக்களை முடக்க வேண்டும் என அப்போது மாணவர்கள் வலியுறுத்தினர்.

சட்டவிரோதமாக ராஜபக்ச வைத்துள்ள சொத்துக்களை முடக்கி அவரது நிறுவனங்களை மூட வேண்டும் எனவும், சொத்துக்களை விற்று அவர் நாட்டை விட்டு தப்பித்துவிடக்கூடாது எனவும் புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள ராஜபக்சவின் சொத்துக்களை முடக்கி அந்த பணத்தை உணவு மற்றும் எரிவாயு நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அமெரிக்க அரசை சில மாணவர்கள் வலியுறுத்தினர்.

இதேபோன்று தலைநகரின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.