​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
'ழ'கரம் ஏந்திய பெண்ணுடன் தமிழணங்கு என குறிப்பிட்ட படத்தை பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்

Published : Apr 09, 2022 1:17 PM



'ழ'கரம் ஏந்திய பெண்ணுடன் தமிழணங்கு என குறிப்பிட்ட படத்தை பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்

Apr 09, 2022 1:17 PM

’இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி கொண்டுவரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில் அது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழின் சிறப்பு எழுத்தான ழகரம் ஏந்திய பெண்ணுடன் தமிழணங்கு என குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.