​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா, உக்ரைனின் புச்சா நகரில் நேரில் ஆய்வு

Published : Apr 09, 2022 9:25 AM

ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா, உக்ரைனின் புச்சா நகரில் நேரில் ஆய்வு

Apr 09, 2022 9:25 AM

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen உக்ரைன் நகரமான Bucha நகரை சென்றடைந்த பின்னர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

ரஷ்ய துருப்புக்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.  அப்பாவி பொதுமக்கள் படுகொலைகளை குறிப்பிட்டு, "மனிதநேயம் சிதைந்துவிட்டது" என்று ஊர்சுலா வேதனை தெரிவித்தார்.

புச்சாவில் சமீபத்தில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் கடும் விமர்சனங்களை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை நிறைவேற்றியுள்ளன, ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.