​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் இரு மடங்கு உயர்வு

Published : Apr 09, 2022 8:14 AM

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் இரு மடங்கு உயர்வு

Apr 09, 2022 8:14 AM

இலங்கையில் அரசுக்கு எதிராக பொது மக்கள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித்தை 2 மடங்காக உயர்த்தி இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. அரசுக்கு எதிராகவும், அதிபர் கோத்தபயா பதவி விலக வேண்டியும் பொது மக்கள், அரசு ஊழியர்கள், புத்த பிக்குகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த அவசரக் கூட்டம் கூட்டிய  இலங்கை மத்திய வங்கி கடன் வசத்திகான வட்டி மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 700 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் 14.5 சதவீதம் வரை உயர்த்தியது. மறுபுறம் அரசை கவிழ்க்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர் கட்சிகள் முயன்று வருகின்றன.