​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Published : Apr 09, 2022 7:05 AM

இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

Apr 09, 2022 7:05 AM

ஆங்கிலம் மொழிக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப அமித் ஷா முயற்சிப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதால், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கும் எந்த முயற்சியும் எதிர்க்கப்படும் என திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.