​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

Published : Apr 09, 2022 6:43 AM

ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

Apr 09, 2022 6:43 AM

ஆஸ்கர் விருது உள்பட ஹாலிவுட்டின் முன்னணி சினிமா நிறுவனங்கள் நடத்தும் விருது, விருந்து உள்ளிட்ட எந்த விழாக்களிலும் 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க நடிகர் வில் ஸ்மித் கலந்து கொள்ள தடை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது விழாவில் காமெடி நகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் குறித்து ஆஸ்கர் அமைப்பின் குழு கூடி ஆலோசனை மேற்கொண்டது.

இதையடுத்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்கர் விழாவில் நடிகர் வில் ஸ்மித் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வில் ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை திரும்பப் பெறுவது, வருங்காலத்தில் ஆஸ்கர் விருதுக்கு அவரது பெயரை பரிந்துரை செய்வது குறித்த எந்த அறிவிப்புகளையும் ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவில்லை.