விழுப்புரம் அருகே ஒழுங்கற்ற சிகை அலங்காரத்துடன் வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் தனது சொந்த செலவில் முடிதிருத்தம் செய்து வைத்தார்.
பில்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிலர் தங்கள் விருப்பம் போல், ஒழுங்கற்ற சிகை அலங்காரம் செய்து கொண்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஆசிரியர்களோடு சேர்ந்து அந்த ஊராட்சியின் தலைவரான சித்திரசேனன் என்பவரும் பல மாதங்களாக மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி வந்தார்.
இறுதியாக ஒரு வார காலம் அவகாசம் கொடுத்தும் மாணவர்கள் கேட்காததால், தன் சொந்தச் செலவில் சித்திரசேனன் நாவிதர்களை அழைத்து வந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, கடந்த 3 நாட்களுக்கும் மேலாக முடிதிருத்தும் பணியை மேற்கொண்டார்.