​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலாப் பயணிகளைக் கவர 74 ஏக்கர் பரப்பில் துலிப் மலர்த் தோட்டம்.. வசந்தக் காலத்தையொட்டிப் பூத்துக் குலுங்கும் பல இலட்சம் மலர்கள்

Published : Apr 08, 2022 4:57 PM

சுற்றுலாப் பயணிகளைக் கவர 74 ஏக்கர் பரப்பில் துலிப் மலர்த் தோட்டம்.. வசந்தக் காலத்தையொட்டிப் பூத்துக் குலுங்கும் பல இலட்சம் மலர்கள்

Apr 08, 2022 4:57 PM

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள துலிப் மலர்த் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் இலட்சக்கணக்கான மலர்களைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்துச் செல்கின்றனர்.

ஸ்ரீநகரில் தால் ஏரிக்கு அருகில் பீர்பாஞ்சல் மலைத்தொடரின் அடிவாரத்தில் 74 ஏக்கர் பரப்பில் துலிப் மலர்த் தோட்டம் அமைந்துள்ளது. இங்குத் துலிப் மலர்ச் செடிகள் மட்டுமல்லாமல் பிற மலர்ச் செடிகளும் வளர்க்கப்பட்டுள்ளன.

துலிப் மலர்ச் செடிகளில் மட்டும் 64 வகைகள் இங்குள்ளதாகக் கூறப்படுகிறது. வசந்தக் காலத்தையொட்டி இங்கு நாள்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பூத்துக் குலுங்கும் மலர்களையும், நீரூற்றுகளையும் கண்டுகளித்துச் செல்கின்றனர்.