​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சிட்னி.. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் கொட்டித் தீர்த்தது

Published : Apr 07, 2022 6:24 PM

கன மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சிட்னி.. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரே இரவில் கொட்டித் தீர்த்தது

Apr 07, 2022 6:24 PM

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு மாதம் முழுதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்ததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிட்னி மாநகரில் ஆண்டுக்கு சராசரியாக 1,200 மில்லிமீட்டர் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் அதை விட கூடுதலாக 1,227 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.