​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Published : Apr 07, 2022 6:10 PM

எஸ்.ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Apr 07, 2022 6:10 PM

தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் நடைபெறும் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், உயர் அதிகாரிகளிடமிருந்து காவலர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக கால அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.