​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது அணை விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - சுதாகர் ரெட்டி

Published : Apr 07, 2022 4:25 PM

மேகதாது அணை விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - சுதாகர் ரெட்டி

Apr 07, 2022 4:25 PM

மதராஸ் மாகாணம் எனும் ஒற்றை குடையின் கீழ் தமிழகமும், கர்நாடகமும் இருந்ததால், மேகதாது அணை விவகாரத்துக்கு இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை  மகப்பேறு  மருத்துவமனையில் தாய்மார்களுக்கும், மருத்துவர்களுக்கும் பழங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு எரிபொருள் விலை குறைவாக உள்ளதாகத் தெரிவித்தார்.