​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல்

Published : Apr 07, 2022 1:46 PM

சென்னையில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல்

Apr 07, 2022 1:46 PM

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 6 ஆயிரத்து 78 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த திட்டத்தை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மூலம் தாம்பரம், பல்லாவரம்,பெருங்களத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 327 கோடி ரூபாய் மதிப்பில் 6 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.