சென்னை கொடுங்கையூரில் புதிதாக வீடு கட்டும் பணிக்கு அப்பகுதி கவுன்சிலரின் கணவர் இடையூறு செய்வதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொய்யாத்தோப்பு பகுதியில் தேவி என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமித்து அவர் வீடு கட்டுவதாகக் கூறி அப்பகுதி கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் கர்ணா கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கவுன்சிலர் அலுவலகம் சென்று தேவி நியாயம் கேட்டுள்ளார். அப்போது கவுன்சிலரோடு இருந்த சிலர் அப்பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படும் நிலையில், வீடியோ எடுத்தவாறே அப்பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குடியிருப்பு வாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே தாங்கள் பணியை நிறுத்தியதாக கவுன்சிலர் தரப்பில் கூறப்படும் நிலையில், வட்டாட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.