தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே ஆட்டோவில் அடைத்து அழைத்துச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.
கீழப்பாவூர் வட்டாரத்தில் அரசு உதவி பெறும் 20க்கும் மேற்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் டி.டி.டி.ஏ (TDTA)கல்வி நிறுவனங்கள் சார்பில் மட்டும் 12 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளியின் சார்பில் இயக்கப்படும் ஆட்டோக்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளை ஆடு, கோழிகளைப் போல் அடைத்து அழைத்துச் செல்லும் காட்சிகளை சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். அவர்களை பள்ளி ஆசிரியைகள் மிரட்டும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.