எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் இன்று முதல் 10 மணி நேரம் மின்வெட்டு
Published : Mar 30, 2022 3:32 PM
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் பல நகரங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. இந்த நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க தினசரி மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல நகரங்கள் இருளில் மூழ்குவதோடு, தொழில்களும் முடங்கியுள்ளன. மின்சாரத்தை சேமிக்க அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பல மாதங்களாக கட்டணம் செலுத்தாத நுகர்வோரின் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.