தமிழகம் முழுவதுமுள்ள 21 மாநகராட்சிகளில் மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டல குழு தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. 14 இடங்களுக்கு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், 11 உறுப்பினர்களை கொண்ட பெருங்குடி மண்டலத்தில் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை எதிர்த்து அதிமுக சார்பில் சதீஷ்குமார் போட்டியிட்டதால், வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தி மண்டல குழுத் தலைவராக ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோன்று, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் திமுக போட்டியின்றி கைப்பற்றியது.
ஈரோடு மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவராக அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமாரின் சகோதரர் தண்டபாணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.