​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசியதாக தமிழிசை வேதனை

Published : Mar 30, 2022 2:32 PM



அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசியதாக தமிழிசை வேதனை

Mar 30, 2022 2:32 PM

இணையதளத்தில் பலரும் தமிழில் மரியாதை குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதாகவும், விமர்சிப்பதாக இருந்தால் கூட அனைவரும் அழகு தமிழை பயன்படுத்த வேண்டும் எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை தொடக்கி வைத்த தமிழிசை சௌந்தரராஜன், விழாவில் உரையாற்றிய போது இவ்வாறு பேசினார்.