வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும், 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா மாவட்டங்கள், நெல்லை, கன்னியாகுமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.