நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்கள் இருவர் கைது
Published : Mar 30, 2022 12:04 PM
நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்கள் இருவர் கைது
Mar 30, 2022 12:04 PM
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு விவசாயிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிறுப்பாக்கத்தை சேர்ந்த விவசாயி 200 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்த நிலையில், அதனை கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வீதம் 200 மூட்டைகளுக்கு 10ஆயிரம் ரூபாயை நெல் கொள்முதல் நிலைய ஊழியர் ராமச்சந்திரன் மற்றும் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகியோர் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த விவசாயி கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை இருவரிடமும் லஞ்சமாக கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.