துறை ரீதியான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6-ந் தேதி மீண்டும் கூடுகிறது.
மே மாதம் 10-ந் தேதிவரை 22 நாட்கள் கூட்டத்தொடரை நடத்த சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேரவையில் கேள்வி நேரமும், 110விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.