நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது - மத்திய அரசு
Published : Mar 30, 2022 10:17 AM
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் 16 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.