உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி-தெய்வானை உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்கள் ஊர்வலமாக வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
இதையடுத்து, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்யங்களுடன் கோவில் மணி ஒலிக்க பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ளது.