கிவ் நகரின் மீது தாக்குதலைக் குறைத்து படைகளைத் திரும்பப் பெறுவதாக ரஷ்யா ஒப்புக் கொண்டதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ரஷ்ய அதிபர் புதின் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் அமைச்சர்கள் துருக்கியில் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தரப்பில் ஆட்சேபம் இல்லை என்று ரஷ்யாவின் தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குழுவின் தலைவர் விளாதிமீர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் போர் 35 வது நாளை எட்டியுள்ள நிலையில் கிவ் மற்றும் செர்னிவ் நகரங்களில் ராணுவ நடவடிக்கையைக் குறைக்க ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. இது படைக்குறைப்புதான் தவிர போர் நிறுத்தம் அல்ல என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.