கவுன்சிலர் கொழுந்தன்னா சும்மாவா… துட்டு எங்க ? மாமூலுக்காக ஆவேசம்.. கம்பி எண்ணும் பரிதாபம்.!
Published : Mar 30, 2022 6:38 AM
கவுன்சிலர் கொழுந்தன்னா சும்மாவா… துட்டு எங்க ? மாமூலுக்காக ஆவேசம்.. கம்பி எண்ணும் பரிதாபம்.!
Mar 30, 2022 6:38 AM
தாம்பரம் அடுத்த பல்லாவரத்தில் கடை கடையாக மாமூல் கேட்டு ரகளை செய்ததோடு பொருட்களை அடித்து நொறுக்கிய கவுன்சிலரின் உறவினர் மற்றும் ரவுடியை போலீசார் கைது செய்தனர்..
சென்னை பல்லாவரம் 31 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ். தனது அண்ணி கவுன்சிலர் ஆனதில் இருந்து ஒயிட் அண்ட் ஒயிட்டில் தாதா போல வலம் வந்த தினேஷ் சம்பவத்தன்று சங்கர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகளிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டி உள்ளான்.
அவனுக்கு பணம் கொடுக்க மறுத்த வியாபாரியின் கடைகளை சாலையில் கிடந்த கற்களால் அடித்து சேதப்படுத்தியதோடு கடையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து சாலையில் வீசி ரகளை செய்துள்ளான்.
கடை கடையாக மாமூல் பிச்சை எடுக்கும் தனது பாதுகாப்பிற்கு சுகுமார் என்ற ரவுடியையும் துணைக்கு அழைத்துச் சென்றுள்ளான்
இவர்கள் இருவரது அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் வருவதற்குள் தப்பிச்சென்ற இருவரையும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு கொண்ட சங்கர் நகர் போலீசார், இருவரையும்
திருநீர்மலை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடதக்கது. இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்